ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினம் - நினைவகத்தில் பிரிட்டன் தூதர் அஞ்சலி

பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்று இன்றுடன் நூறாண்டுகள் நிறைவு பெறுகிறது. ஜாலியன் வாலாபாக்கில் உயிர் நீத்தோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் பிரிட்டன் தூதர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

1919 ஏப்ரல் 13-ந் தேதி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு கருப்பு தினமாகும். பஞ்சாபின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக்கில் பைசா கி திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் பிரிட்டிஷ் படையின் ஜெனரல் ரெஜினால்டு டயர் என்பவன் கண்மூடித்தனமாக சுட உத்தரவிட்டான். பிரிட்டிஷ் படையினா நாலாபுறமும் சுற்றி வளைத்து, எந்திர துப்பாக்க்யால் குருவி சுடுவது போல் சுட்டதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாண்டனர். காயமடைந்தோர் எண்ணிக்கையோ எண்ணிலடங்காது.

இந்த துயரம் சம்பவம் நடந்து நூறாண்டுகள் நிறைவடையும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் பிரிட்டன் அரசு, ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு மன்னிப்பு கோருவதாக அந் நாட்டின் பிரதமர் தெரசா மே பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜாலியன் வாலாபாக்கில் உள்ள உயர் நீத்தோர் நினைவுச் சின்னத்தில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் அஸ் கொய்த் தலைமையிலான குழுவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு வைக்கப்பட் டிருந்த டைரியில், பிரிட்டன் நாட்டின் சார்பில் ஜாலியன் வாலாபாக் துயர சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார்.

More News >>