காவலாளியாக நான் எப்போதுமே உஷார் தேனி பிரசாரத்தில் மோடி

காவலாளியாக தான் உஷாராக இருக்கிறேன் என பிரதமர் மோடி தேனி பிரசாரத்தில் பேசினார்.

(PC-ANI)

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து இன்று தேனியில் பிரசாரம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. பொதுக்கூட்ட மேடையில் மோடி பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்.

பின் பேசிய மோடி, ‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான். காங்கிரஸ் ஆட்சியில் போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது? என்று கேள்வி எழுப்பினார். புதிய இந்தியாவை நோக்கிப் பயணிக்க உள்ளோம். ஆனால், காங்கிரஸ் இதனை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் சிறந்த நண்பர், ‘நேர்மையின்மை’ தான் என்று காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காவலாளியாக நான் உஷாராகவே உள்ளேன்; மக்களை ஏமாற்றி திருட்டுத்தனம் செய்வோரை இந்த காவலாளி கண்டுபிடிப்பேன்’ என்றார். ‘வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என திமுக கூட்டணியைத் தாக்கி பேசிய அவர், பாஜக இருக்கும்வரை நம் நம்பிக்கை, கலாச்சாரத்தை அழிக்க முடியாது என்றார். பின், கங்கையை தூய்மைப்படுத்தியது போல் வைகையையும் தூய்மைப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

More News >>