மோடியிடம் பேசி நீட் தேர்வுக்கு விலக்கு பெற எடப்பாடிக்கு தைரியம் இருக்கிறதா? கே.எஸ். அழகிரி கேள்வி!

தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவரான கே.எஸ். அழகிரி, மோடியிடம் பேசி நீட் தேர்வுக்கு விலக்கு பெற எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் கிடையாது எனக் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரியிடம், செய்தியாளர்கள் பேட்டியெடுத்த போது, ராகுல் காந்தி நேற்று தமிழகத்தில் ஆற்றிய பிரசாரம், தமிழக மக்களிடையே புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

தமிழக இளைஞர்கள் கோ பேக் மோடி என்ற ஒற்றைக் குரலில் வலிமையாக உள்ளனர். பிரதமர் மோடியின் பிரசாரக் கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்தாலே உள்ளே அனுமதிக்க பயப்படுகின்றனர்.

நீட் தேர்வு மாணவர்கல் விருப்பத்திற்கு விடப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளார். நேற்றைய கூட்டத்திலும், இன்னொரு அனிதா மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது என்று பேசினார்.

ஆனால், அதிமுக அரசை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் கூட்டணி வைத்துள்ள பாஜக நீட் என்றாலே வாயை திறப்பதில்லை. அதை தவிர்த்து அடுத்த கேள்விக்கு பதில் சொல்ல தொடங்கி விடுகின்றனர் என கே.எஸ். அழகிரி கூறினார்.

More News >>