4 தொகுதி இடைத்தேர்தல்...நடு விரலில் மை வைக்கப்படும் - சத்யபிரதா சாஹூ

நான்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு ‘நடு விரலில் மை’ வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு அடையாளமாக ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். கள்ள ஓட்டுகள் போடுவதை தவிர்க்க இந்த மை வைக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. இரு தேர்தலும் ஒரே நேரத்தில் நடப்பதால் எந்த விரலில் மை வைக்கப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரே விரலில், அதாவது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். மேலும், அடுத்த மாதம் 19-ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்போது, ஏற்கனவே வைத்த மை அழியாது என்பதால் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும்’ எனத் தெரிவித்தார். 

More News >>