ராகுல் காந்தி ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுப்பு- தொடரும் மம்தா அரசின் அடாவடி
மேற்குவங்கம் சிலிகுரியில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் அவரது பிரசார கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
மத்தியில் புதிய அரசசை தேர்ந்தெடுப்பதற்காக 17வது மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பாக அதன் தலைவர் ராகுல் காந்தியின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியும் இந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடிக்காவி்ட்டாலும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.நாடு முழுவதும் ராகுல் காந்தி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். மேற்குவங்கம் மாநிலம் சிலிகுரியில் நாளை ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வேண்டி காவல்துறையிடம் காங்கிரசார் மனு கொடுத்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் போலீசார் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்களின் ஹெலிகாப்டர் தரையிறங்க மம்தா அரசு தடை போடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்துக்காக அந்த மாநிலத்துக்கு வந்த போது அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. பின்பு அவர் சாலை மார்க்கமாக மேற்குவங்கத்துக்கு வந்து சென்றார்.