ஓட்டு கேட்டா, அரசியலுக்கு வருவேன்னு அர்த்தமா?- நடிகை சமந்தா புலம்பல்
தெலுங்கு தேச வேட்பாளருக்கு ஓட்டு கேட்டதால் நான் அரசியலுக்கு வருவேன்னு அர்த்தமா என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகும், தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவர் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத நபர். இந்நிலையில் ஆந்திராவில் சமீபத்தில் நடந்த முடிந்த தேர்தல் சமயத்தில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் அனகானி சத்ய பிரசாத்துக்கு ஓட்டு போடும்படி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகை சமந்தா.
அந்த வீடியோவை வெளியிட்டதற்கு சமந்தாவை ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். உங்களுக்கும் அரசியல் ஆசை வந்து வி்ட்டதா?, நடிகர், நடிகைகளுக்கு வேறு வேலை இல்லையா?, நீங்களுமா என நடிகை சமந்தாவை நெட்டின்சன்கள் வறுத்தெடுத்தனர்.
இதனால் கடுப்பான நடிகை சமந்தா, எனது தோழி டாக்டர் மஞ்சுளாவின் சகோதரர்தான் சத்ய பிரசாத். அவரை எனக்கு நன்றாக தெரியும். நான் ஐதராபாத்துக்கு வந்தது முதல் அவரை எனக்கு தெரியும். நட்பு அடிப்படையில்தான் அவருக்கு நான் ஓட்டு கேட்டேன். நான் அவருக்கு ஓட்டு கேட்டால் அரசியலுக்கு வருவேன்னு அர்த்தமா? என நெட்டிசன்களுக்கு பதில் அளித்தார்.