முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் போக்கும் சில ஃபேஸ் பேக்குகள்..
முக அழகை அசிங்கமாக காட்டும் மேடு பள்ளங்கள் நிறைந்த சருமத் துளைகளைப் போக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் முடியும். அதுவும் ஒருசில ஃபேஸ் பேக்குகள் கொண்டு எளிதில் முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைப் போக்கலாம்.
முல்தானி மெட்டி மற்றும் ஆலிவ் ஆயில்
ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறையும்.
தேன் மற்றும் டீ-ட்ரை எண்ணெய்
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் தேனுடன் 3-4 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் நனைத்து, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்
1/2 டீஸ்பூன் சந்தன பவுடரை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
பின் 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
மஞ்சள் மற்றும் பால்
ஒரு சிறிய பௌலில் 1 டீஸ்பூன் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வையுங்கள்.
பின்பு முகத்தை நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.