ஜெயபிரதா காக்கி ஜட்டி போட்டிருக்கிறார் மோசமாக விமர்சித்த சமாஜ்வாதி வேட்பாளர் மீது வழக்குப் பதிவு
பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை ஜெயபிரதா காக்கி ஜட்டி அணிந்திருப்பதாக மிக மோசமாக விமர்சித்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அஸாம் கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஜெயபிரதா மற்றும் சமாஜ்வாதி வேட்பாளர் அஸாம் கான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தின் போது, ”பாஜக சார்பில் போட்டியிடும் ஜெயபிரதாவின் ஜட்டியின் நிறம் என்ன தெரியுமா? காக்கி, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அணியும் அதே காக்கி ஜட்டியைத் தான் ஜெயபிரதாவும் அணிந்துள்ளார்” என அஸாம் கான் மேடையில் பேசினார். அந்த கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாதியின் தேர்தல் அறிவிப்பில் பெண்கள் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கட்சியின் வேட்பாளரே பாஜகவின் ஒரு பெண் வேட்பாளர் மீது இப்படியொரு ஆபாசமான விமர்சனத்தை முன் வைக்கலாமா என பாஜகவினர் சமாஜ்வாதி கட்சிக்கு கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், இந்த விவாகாரம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் அஸாம் கானுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரது பேரில் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.