நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்!

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக உள்ள நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி நடக்கிறது. இந்த நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வு குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும், இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து எம்பிபிஎஸ் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வை சந்தித்துத் தான் ஆகவேண்டும். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்த ஆண்டு நீட் தேர்வினை எழுத உள்ளனர். மேலும், நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் நீட் தேர்வினை எழுதவுள்ளனர்.

கடந்த ஆண்டில் நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபிடிகள் நடைபெற்றன. ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குச் சென்று தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.

பல பேருக்கு ஹால் டிக்கெட்டில் தவறான தகவல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதுபோன்ற எந்த பிரச்னையும் இந்தாண்டு நீட் தேர்வில் மாணவர்கள் சந்திக்க மாட்டார்கள் என நீட் தேர்வை நடத்தும் தேர்வுக் குழு உறுதியளித்துள்ளது. மேலும், தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுதுவார்கள் என்றும், அதற்கான கூடுதல் தேர்தல் மையங்களை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வரும் மே மாதம் 5ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே கட்டமாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் மாணவர்கள் www.ntaneet.nic.in அல்லது www.nta.ac.in என்ற வெப்சைட்டுகளில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

More News >>