வேகமாக சென்ற காரை துரத்திய போலீசார் காருக்குள் 3 பெண்கள் நிர்வாணமாக இருந்ததால் ஷாக்!
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வேகமாக சென்ற காரை ஃபுளோரிடா போலீசார் துரத்திச் சென்றனர். காரை தடுத்து நிறுத்தி உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காருக்குள் இருந்த மூன்று பெண்களும் ஆடையின்றி நிர்வாணமாக இருந்த சம்பவம் அந்த பகுதியில் வைரலாகி உள்ளது.
அமெரிக்காவில் அவ்வப்போது பொதுவெளியில் ஆண்கள் மற்றும் பெண்கள் நிர்வாணமாக திரிவதும் அவர்களை போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் ஃபுளோரிடா மாகாணத்தில் நடந்துள்ளது.
கட்டுப்பாட்டை மீறி அதிக வேகமாக சென்ற ஒரு சொகுசு காரை பிடிக்க போலீசார் தங்களது வாகனம் மூலம் அந்த காரை துரத்தியுள்ளனர். ஆனால், போலீசார் வாகனம் எச்சரிக்கை விடுத்தும் நிற்காமல் அந்த கார் படு வேகமாக சென்றது மட்டுமில்லாமல், ராங் வேயிலும் பயணிக்க தொடங்கியது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போலீஸ் வாகனம் அந்த காரை துரத்தியது. 33 கி.மீ., சென்ற நிலையில், அந்த காரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
அந்த காரில் இருந்த மூன்று பெண்களும் நிர்வாணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண்களை கைது செய்து அவர்கள் மீது வேகமாக கார் ஓட்டியது, பொதுவெளியில் நிர்வாணமாக திரிந்தது மற்றும் ராங் வேயில் சென்றது உள்ளிட்ட பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.