`49 வருஷம் கழிச்சு ட்ரை பண்ணுங்க தம்பி - 3 வயது குழந்தையின் சேட்டையால் தந்தைக்கு நேர்ந்த சோகம்

உலகில் பாதுகாக்கப்பட்ட மொபைல் போனாக பிளாக்பெரி இருந்து வந்தது. ஆனால் அந்த நிறுவனம் மொபைல்களையே நிறுத்திவிட்டதால் தற்போது அந்த இடத்தில் ஆப்பிள் நிறுவனங்களின் மொபைல் போன்கள் தான் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களுக்கான செக்யூரிட்டி ஆப்ஷன்களை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் வாடிக்கையாளர்களை தவிர்த்து வேறு யாரவது மொபைல் பயன்படுத்த வேண்டும் என்றால் சரியான பாஸ்வேர்டை தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் போனை நோண்டினால் சிக்கல் தான். அந்த போனை அதன்பிறகு பயன்படுத்த முடியாது. அந்த அளவுக்கு செக்யூரிட்டி ஆப்ஷன்கள் மாற்றப்பட்டுவிட்டது. இதற்கு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் 3 வயது குழந்தை ஒன்று தனது தந்தையின் ஐபேடை எடுத்து நோண்டியுள்ளது. அப்போது ஐபேட் லாக்கில் இருந்ததால் அதனை திறக்க பல முறை பாஸ்வேர்டை தவறாக அழுத்தியுள்ளது. இதில் அந்த ஐபேடு திறக்க முடியாத அளவுக்கு மூடிக் கொண்டது. மீண்டும் மீண்டும் இதே நிலை தொடர்ந்ததால் மொத்தமாக அந்த ஐபேடு லாக்காகி விட்டது. மேலும் தற்போது 2 கோடியே 55 லட்சத்து 36 ஆயிரத்து 442 நிமிடங்கள் கழித்து திரும்ப திறக்க முயற்சி செய்யுங்கள் என்பது மட்டும் அந்த டிஸ்பிளேவில் தெரிகிறது.

இது சுமார் 49 ஆண்டுகளுக்கு சமமான நேரமாகும். இதனை புகைப்படமாக எடுத்து அந்த குழந்தையின் தந்தை ஐபேடை திறக்க முடியவில்லை எனக் கூறி ஆப்பிள் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். ஆப்பிள் நிறுவனமோ அதை திறக்க வழியில்லை என்று கைவிரித்து விட்டனர். மேலும் மாற்று வழியில் திறக்க முயன்றால் அதில் சேமிக்கப் பட்டுள்ள தகவல்கள் அழிந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.

More News >>