மொயீன் அலி, டிவில்லியர்ஸின் 90 ரன்கள் பாட்னர்ஷிப் - மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு

மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஒரு வெற்றியை பெற்ற பெங்களூரு அணி இரண்டாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த அணிக்கு வழக்கம் போல பார்த்தீவ் படேல் - விராட் கோலி ஜோடி துவக்கம் தந்தது. இந்த ஜோடி இரண்டு ஓவர் மட்டுமே தாக்குபிடித்தது. எட்டு ரன்கள் எடுத்தநிலையில் கேப்டன் கோலி அவுட் ஆனார். இதன்பின் வந்த டிவில்லியர்ஸ் உடன் இணைந்து சிறிது நேரம் ரன்கள் சேர்த்தார் பார்த்தீவ் படேல். அவரும் 28 ரன்களில் வெளியேறினார்.

இருப்பினும் அடுத்து வந்த மொயீன் அலி, டிவில்லியர்ஸ் உடன் இணைந்து வலுவான அடித்தளம் அமைத்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. 95 ரன்கள் வரை இந்த பாட்னர்ஷிப் சேர்த்தது. அரை சதம் எடுத்த நிலையில் மொயீன் அலி அவுட் ஆக, டிவில்லியர்ஸ் 75 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் செய்யப்பட்டார். இதன்பின் வந்த வீரர்கள் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் மலிங்கா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

More News >>