சுவையான தக்காளி இனிப்பு பச்சடி ரெசிபி
சுவையான தக்காளி இனிப்பு பச்சடி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
உலர் திராட்சை - கால் கப்
பேரிச்சைப் பழம் - கால் கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
தக்காளி - 8
செய்முறை:
ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்விட்டு சூடானதும் முந்திரிப் பருப்பு, திராட்சை, பேரிச்சைப் பழத் துண்டுகள் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சர்க்கரை, அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிடவும்.அத்துடன். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சுமார் அரை மணி நேரம் வேகவிடவும். இடையிடையே, மூன்று டேபிள் ஸ்பூன் நெய்விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
தக்காளி நன்றாக குழைந்து ஹல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்து வைத்த முந்திரி, திராட்சை கலவையை சேர்த்து கிளறி இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான தக்காளி இனிப்பு பச்சடி ரெடி..!