சீரியல் சீக்ரெட்ஸ் 2 நாயகன் நாயகியை சேர விடாமல் தடுக்க இவர்கள் போடும் சதி திட்டங்கள் சச்சை ரகம்
சீரியல்களில் ஒரு ஆபத்தான ட்ரெண்ட் பின்பற்றப்பட்ட வருகிறது என்று முந்தைய சீரியல் சீக்ரெட்ஸ் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அது என்னவென்று பார்ப்பதற்கு முன்னர், கடந்த வாரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சான டாப் 10 சீரியல்களின் பட்டியலை பார்க்கலாம்.
செம்பருத்தி (ஜீ தமிழ்) நாயகி (சன்) யாரடி நீ மோகினி (ஜீ) கன்மணி (சன்) கல்யாண வீடு (சன்) ரோஜா (சன்) லக்ஷ்மி ஸ்டோர்ஸ் (சன்) அழகு (சன்) ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி (ஜீ) பூவே பூச்சூடவா (ஜீ)இந்த பட்டியலில் இருந்து என்ன தெரிகிறது. மக்களை அதிகம் சென்றடைவது சன் மற்றும் ஜீ சீரியல்கள் தான். நகரங்கள் விஜய் டிவி சீரியல்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கிராமப்புரங்களில் சன் மற்றும் ஜீ தமிழ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் தரவுகள் சொல்கின்றன.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் ஒலிப்பரப்பாகும் பெரும்பாலான சீரியல்களில் ஒரு மோசமான ட்ரெண்ட் பின்பற்றுப்பட்டு வருகிறது. ஏற்கெனவே திருமணமான நாயகனை காதலிக்கும் பெண் தான் கதையின் வில்லி. நாயகன் நாயகியை பிரிக்க தொடர்ந்து சதி செய்து கொண்டிருப்பார். அவருக்கு உதவ நாயகன் வீட்டில் சில அல்லக்கைகள் இருப்பார்கள். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்னும் கான்செப்டை பின்பற்றி நாயகன் நாயகியின் முதலிரவு நடக்காமல் தடுக்க பல்வேறு திட்டங்களை தீட்டி சதி செய்கிறார் அந்த வில்லி. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் அனைத்து சீரியல்களிலும் நாயகன் நாயகியை சேர விடாமல் தடுப்பதில் பெரும் பங்காற்றுவது நாயகனின் அம்மா தான். தாய்மை என்னும் தூய்மையான பந்தத்தை எந்தளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமா அந்த அளவுக்கு டேமேஜ் செய்கிறார்கள் இன்றைய சின்ன திரை இயக்குநர்கள். வில்லி என்றாலும் ஒரு லாஜிக் வேண்டாமா என்னும் ரேஞ்சில் இருக்கிறது இவர்கள் காட்சி சித்தரிப்புகள். சீரியல் இயக்குநர்கள் சிறிதளவேனும் சமூக பொறுப்புணர்வுடன் சீரியல்களை இயக்குவது அவசியம்.
சரி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவுக்கும் செந்திலின் மனைவி ராஜலட்சுமிக்கும் இடையே ஒரு பனிப்போர் நடக்கிறது தெரியுமா? அடுத்த சீரியல் சீக்ரெட்ஸ் கட்டுரையில் அந்த விஷயத்தை விவரிக்கிறேன்.