ஜடேஜாவுக்கு மோடி எதுக்கு நன்றி சொன்னார்.. எதுக்கு வாழ்த்துகள் சொன்னார் தெரியுமா?
உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிந்திரசிங் ஜடேஜா இடம்பிடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல் ரவுண்டர் ஜடேஜா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், 2019-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்ததற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு மோடி வாழ்த்துகள் கூறியுள்ளார். மேலும், அதனுடன் சேர்த்து நன்றியையும் தெரிவித்தார்.
அந்த நன்றி எதற்காக தெரியுமா? ரவிந்திரசிங் ஜடேஜா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ”நான் பாஜகவை ஆதரிக்கிறேன்” என பதிவிட்டு இருந்தார். அதற்காகத் தான் தற்போது நன்றி மற்றும் வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் மற்ற வீரர்கள் இடம்பிடித்தது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காத இந்திய பிரதமர் மோடி, தனது கட்சியில் இணைந்த வீரருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
முன்னதாக ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜாகவில் இணைந்தார். அவருக்கு போட்டியாக ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் மற்றும் ஜடேஜாவின் தங்கை நைனாபா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தந்தை மற்றும் தங்கைக்கு பதிலாக மனைவிக்கு தனது ஆதரவை ஜடேஜா அளித்துள்ளார்.