இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அண்புமனி!

பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை, அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைத்துறை சாதனை புரிந்தமைக்காக இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இசைஞானி இளையராஜா அவர்களை சென்னை வடபழனியில் உள்ள அவரது அலுவலகத்தில் பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று காலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

More News >>