ராஜமெளலியின் அடுத்த பிரமாண்டம் ஹீரோயின் கிடைக்காமல் திணறும் படக்குழு

ராஜமெளலி இயக்கிவரும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நடிகைகள் ஒப்பந்தமாவதில் இழுபறி நீடித்துவருகிறது.

பாகுபலியின் இரண்டு பாகங்களையும் இயக்கி, மாபெரும் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜமெளலி. இவர் தற்பொழுது இயக்கிவரும் படம் ஆர்.ஆர்.ஆர். அதென்ன ஆர்.ஆர்.ஆர். என்றால், இயக்குநர் ராஜமெளலி, நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ராமாராவ் இவர்களின் முதல் எழுத்தை மட்டும் வைத்து தற்காலிகமாக ஆர்.ஆர்.ஆர். என்று இப்படத்தை அழைத்துவருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது மும்மரமாக நடந்துவருகிறது.

அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். சமீபத்தில் ஒப்பந்தமான வெளிநாட்டு நடிகையான டெய்சி படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக யார் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்பொழுது நடந்துவருகிறது. இந்நிலையில் நித்யாமேனன், ஷரத்தா கபூர் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் உருவாகிவரும் இப்படம் 2020, ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

 

More News >>