யம்மி.. ஃப்ரூட் ஸ்மூத்தி ரெசிபி
வெயிலுக்கு ஜில்லுன்னு ஃப்ரூட் ஸ்மூத்தி செய்யலாமா.. ?
தேவையான பொருட்கள்:
மாம்பழம் 1
வாழைப்பழம் - 1
பால் - ஒரு கப்
வெல்லத்தூள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மாம்பழத்தின் தோல் உரித்து, கொட்டையை நீக்கிவிட்டு துண்டுகளை மிக்ஸி ஜாரில் போடவும்.
இதேபோல், வாழைப்பழத்தின் தோலை உரித்து துண்டுகளாக அத்துடன் சேர்க்கவும்.
மேற்கொண்டு, வெல்லத்தூள், பால் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு, ஒரு தம்ளரில் ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு அதன் மீது அரைத்து வைத்த பழக் கலவையை ஊற்றவும்.
பின்னர், வாழைப்பழத் துண்டுகள், வெல்லத்தூள் தூவி அலங்கரித்தால் சுவையான வாழைப்பழ & மாம்பழ ஸ்மூத்தி ரெடி..!