கோடிகளை பதுக்கும் ஆளா நான்..? கோட்டும் வொய்ட்டு நோட்டும் வொய்ட்டு தமிழிசை விளாசல்

வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதனிடையில் பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், ‘தூத்துக்குடியில் பணம் ஆறாக கரைபுரண்டு ஓடுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து தொலைகாட்சி ஒன்றிக்கு பேட்டி அளித்த அவர், ‘தேர்தல் பரப்புரை முடிந்த பிறகுதான் பணப் பட்டுவாடா நடக்கிறது. இதனால் தானே வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். தூத்துக்குடியில் தான் மிக அதிகமான பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் பணம் ஆறாய் பாய்கிறது. ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தல் இப்படி நடத்தால் அது சாத்தியமா? தேர்தல் பரப்புரைக்கு முன்னரே பணம் விநியோகம் தொடங்கிவிட்டது. வருமான வரி துறைக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்துத்தான் சோதனை நடத்தப்படுகிறதே தவிர, எந்த உள்நோக்கமும் இல்லை. எதிர்க்கட்சியினர் மட்டும் குறிவைக்கப் படுவதில்லை, ஆளுங் கட்சி அமைச்சர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலில் குற்றம்சாட்டுகிறார். நான் என்ன கோடிகளைப் பதுக்கி வைக்கிற ஆள் மாதிரி தெரிகிறேனா? அவரை வந்து பார்க்கச் சொல்லுங்கள். முறைகேடாக சம்பாதிக்கும் ஆள் நானில்லை. கொஞ்ச நஞ்சமாகச் சேர்த்து வைத்த பணமும் மருத்துவ தொழிலில் சம்பாதித்தது. என்னுடைய கோட்டும் வொய்ட்டு; நோட்டும் வொய்ட்டு’ என்றவர்,

மோடி ஜியை நம்புகிறேன்...2ஜியை நம்பவில்லை என திமுக-வை சாடினார்.

 

பொள்ளாச்சி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, முகிலன் மாயம் என இறுதி கட்ட பிரசாரத்தில் அதிமுக – பாஜகவை நாக்-அவுட் செய்த கனிமொழி!
More News >>