இந்தியாவில் சிறந்த நடிகர் சூர்யா.. ஆஸ்கர் விருது வென்ற பிரபலம் பாராட்டு
'இந்தியாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக தமிழ் நடிகர் சூர்யா திகழ்கிறார்' என்று 'சூரரைப் போற்று' தமிழ்த் திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் குனீத் மோங்கா பாராட்டியுள்ளார்.நடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நாயகி அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனித் மோங்காவும் தயாரிக்கிறார். மும்பையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் குனித் மோங்காவின் தயாரிப்பில் உருவான 'Period: End of Sentence' டாக்குமெண்டரி படம் விருதை வென்றது.குனித் மோங்காவிடம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய புத்தகத்தின் உரிமை உள்ளது. ஜி.ஆர்.கோபிநாத் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கியவர். ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்து ஊடகத்துக்கு பேட்டியளித்த இணை தயாரிப்பாளர் குனித் மோங்கா, “தமிழ் சினிமாவில் எங்கள் பயணத்தைத் தொடங்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் படமான 'சூரரைப் போற்று'வில் சூர்யாவைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. நம் நாட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்கிறார். அவர் நம் தேசியச் சின்னம்’’ என்று தெரிவித்துள்ளார்.|படம் குறித்து நடிகர் சூர்யா கூறுகையில், “திறமைவாய்ந்த படைப்பாளிகள் ஒரே அணியில் இணைந்திருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. படம் வேற லெவலில் இருக்கும் ” என்றார்.
ஒரே ஒரு போட்டோ கேட்டோம்; தர்ம அடிதான் கிடைச்சுது! விஜய் சேதுபதியின் திடீர் மாற்றத்தால் குமுறும் ரசிகர்கள்.