இதுக்கும் காங்கிரஸ்தான் காரணம் நிர்மலா சீதாராமன் போட்ட குண்டு!

பா.ஜ.க.வே மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொல்லியிருந்தார் அல்லவா? இதற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தமிழகத்திற்கு கொஞ்ச நாள் முன்பு வரை அடிக்கடி வந்து சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போது காணவி்ல்லையே என்று யோசித்திருப்பீர்கள். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அவர்தான் முதலமைச்சர் என்ற அளவுக்கு பேசினார்கள். ஆனால், என்னவோ தெரியவில்லை. இப்போது தேர்தல் பணியில் டெல்லிக்கு பொறுப்பாளராக பா.ஜ.க. அவரை நியமித்து விட்டது.

அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியே வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பேசியிருக்கிறார். எதற்காக இப்படி அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை.

இதற்கு பின்னணியிலும் காங்கிரஸ்தான் இருக்கும் என்பது என் சொந்தக் கருத்து. இதுவும் காங்கிரஸ் நாடகம்தான். வேண்டுமென்றே அவரை காங்கிரஸ் இப்படி பேச வைத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடிக்கடி பாகிஸ்தானுக்கு போவார்கள். எப்படியாவது மோடி ஆட்சியை மாற்ற வேண்டும் என்று அங்கு போய்தான் கோரிக்கை விடுவார்கள். அதன் ஒரு பகுதியாகவே இம்ரான்கான் பேச்சை நான் பார்க்கிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

எப்போதும் காங்கிரசை கரித்துக் கொட்டிக் கொண்டே இருந்தாலும் நிர்மலா சீதாராமனிடம் நல்ல மனிதநேயமும் உண்டு. கேரளாவுக்கு பிரச்சாரத்திற்காக சென்றிருந்த அவர் நேற்று திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டு சென்றார்.

 

திரிணாமுல் கட்சிக்கு பிரச்சாரம் துரத்தப்பட்ட வங்கதேச நடிகர்!
More News >>