பனிச்சரிவில் சிக்கி மூன்று வீரர்கள் பலி ஒருவர் படுகாயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சரில் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதயில் உள்ள மச்சில் செக்டாரில் பாதுகாப்பு பணிக்காக ராணுவ வீரர்கள் முகாமிட்டு தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை அங்கு திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மூன்று வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவரை சிசிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.