சவுதியில் கொலை வழக்கில் கைதான 2 இந்தியர்களின் தலை துண்டிப்பு
சவுதி அரேபியாவில் கொலை குற்ற வழக்கில் கைதான 2 இந்தியர்களின் தலை துண்டிக்கப்பட்டது.
பெட்ரோலிய எண்ணெய் வளத்தால் செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளில் முக்கியமான நாடு சவுதி அரேபியா. பழமைவாத முஸ்லிம் கோட்பாடுகளை கடுமையாக கடைப்பிடித்து வந்த அந்த நாடு தற்போது பெண்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் சிறு குற்றத்துக்கும் அங்கு கடுமையாக இருக்கும். இதனால் அங்கு தப்பு அல்லது தவறுகள் செய்யவே மக்கள் அஞ்சுவார்கள்.
சவுதி அரேபியாவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சத்வைந்தர் குமார், ஹர்ஜீத் சிங் மற்றும் மற்றொரு இந்தியரான ஆரிப் இமாமுதின் ஆகிய 3 பேரும் வேலை பார்த்து வந்தனர். அதேசமயம் திருட்டு கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கொள்ளை அடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஆரிப் இமாமுதினுக்கு மற்ற இருவருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில், ஆரிப் இமாமுதினை சத்வைந்தர் குமார் மற்றும் ஹர்ஜீத் சிங் கொலை செய்து விட்டனர். இதனையடுத்து சத்வைந்தர் குமார் மற்றும் ஹர்ஜீத் சிங்கை சவுதி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கொலை குற்றத்துக்காக அவர்களின் தலையை துண்டிக்க சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, கொலை குற்றத்துக்காக சத்வைந்தர் குமார் மற்றும் ஹர்ஜீத் சிங் தலைகள் துண்டிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்காமலேயே அந்த தண்டனையை அந்நாட்டு அதிகாரிகள் நிறைவேற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் கொலை குற்றத்துக்காக சத்வைந்தர் குமார் மற்றும் ஹர்ஜீத் சிங் தலைகள் துண்டிக்கப்பட்டதை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.