ஹீரோவில் சிவகார்த்திகேயன் ரோல் என்ன தெரியுமா?

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தை முடித்தப் பிறகு, இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சிவாகார்த்திகேயனுக்கு ஜோடீயாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். தவிர இவானா முக்கிய ரோலில் நடிக்கிறார். ஹீரோ படத்தில்ல் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடிக்கிறார். அதற்கான ட்பெஷல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சிவா. அதுமட்டுமின்றி, அதற்காக தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியிருக்கிறார். சமீபத்தில் படத்துக்கான பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியிருக்கிறது படக்குழு. அதுவும் சிறப்பாக வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இப்படம் மட்டுமின்றி, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்திலும், சன் நிறுவன தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் சிவா. சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் மே1-ஆம் தேதி வெளியாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.

More News >>