வீட்டுல முடங்கிக் கிடக்காதீங்க! குஷ்பு ஆவேசப் பேட்டி!!

‘‘சும்மா, வாட்ஸ் அப்பில் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீங்க மக்களே...’’ என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு இன்று அதிகாலை ஏழு மணிக்கே வந்து வாக்களித்தார். அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களியுங்கள்.

எப்பவும் வாட்ஸ் அப், ட்விட்டர் என்று சமூக ஊடகங்களில் மட்டும் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீங்க. உங்கள் உரிமைகளை மீட்க வேண்டும் என்றால் முதலில் தவறாமல் வாக்களியுங்கள். இவ்வாறு குஷ்பு கூறினார்.

More News >>