பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமான் வாக்களித்தார்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாட்டிற்கான எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா, முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசனுடன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்துக் கொண்டு நிற்கிறார். அங்கு திடீரென பவர் கட் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.