தேர்தல் பணிக்காக வந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த அரசு அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார்.
தமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற 38 தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குச்சாவடிகளில் பணியாற்ற மற்றும் வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் செந்தில். 50 வயதான செந்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சுக்கமநாயக்கன் பட்டிக்கு தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அதற்காக நேற்று சுக்கன்பட்டிக்கு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேர்தல் பணிக்காக வந்த இடத்தில் செந்தில் உயிர் இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது