பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு - வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பிலும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு ஓட்டு கூட பதிவாகாமல் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடியுள்ளன.
திருப்பூர் தொகுதியில் பல்லடம் அருகே வெங்கடாபுரம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிவாசிகள், நீர் நிலையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3000-க்கும் மேற்பட்டோர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
விருதுநகர் தொகுதி மீனாட்சிபுரம் கிராமத்தினர் சாலை வசதி இல்லை எனக் கூறி 440 பேர் வாக்களிக்கச் செல்லவில்லை.. திருமங்கலம் அருகே உள்ள மேல உப்பிலிக் குண்டு கிராமத்திலும் யாரும் வாக்களிக்க வில்லை
கரூர் தொகுதியில் உள்ள சங்கம ரெட்டியபட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி அந்த கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிருள்ள ஆத்திகுளம், திருவள்ளூர் தொகுதி நாகராஜ கண்டிகை உள் பட பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை சமாதானப்படுத்துவதில், அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.