மை வைக்க சொன்னா...பாலிஷ் போட்டு விட்டுட்டாங்க பாஸ்..! கலகலக்கும் விஜய்சேதுபதி
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்து வருகிறது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதன் வரிசையில், நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய கடைமையை ஆற்றினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி, ‘முதன்முதலாக வாக்களிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வாக்களிப்பது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். ஏனெனில், 18 வயதில் நம் வீட்டில் நமது விருப்பங்களைக் கேட்பார்களா? என்பது தெரியாது..ஆனால், இந்த நாட்டை யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. நானும் ஓட்டுப் போட்டுவிட்டேன். எல்லோரும் போலவே நம்பிக்கையில் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். நல்லது நடக்கும் என்றவரிடம்,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் முறைகேடு இருப்பதாகப் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதைப் பற்றின உங்கள் கருத்து? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், ‘இது குறித்த செய்திகள் வாட்ஸ் அப்பில் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கான தீர்வு என்னிடம் இல்லை. இருப்பினும், அது இருக்கிறது (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு) இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி. மக்களின் மிகப்பெரிய நம்பிக்கை இது. தற்போது, மக்களிடம் அரசியல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால், தமிழகத்தில் வாக்கு சதவீதம் இம்முறை அதிகமாக இருக்கும்’ என்றவர்.,
நிருபர்களிடம் தன் ஆள்காட்டி விரலைக் காட்டி ’மை வைக்க சொன்னா பாலிஷ் போட்டு விட்டுட்டாங்க...’என்று நகைப்புடன் கூறினார் விஜய் சேதுபதி.