ஓட்டுப் போட்ட சின்மயியை கலாய்த்த தமிழ்பட இயக்குநர்!
ஓட்டுப் போட்ட கையோடு செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட பாடகி சின்மயியை தமிழ்படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் கலாய்த்துள்ளார்.
மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்துள்ள பாடகி சின்மயி, தொடர்ந்து தனது ட்விட்டரில் எந்த ஒரு பதிவை போட்டாலும், அதற்கு கீழ் தரக் குறைவான கமெண்டுகளும், கிண்டல் கமெண்டுகளும் அதிகம் காணப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலை பள்ளியில் தனது வாக்கினை இன்று பதிவு செய்த சின்மயி, மை விரலுடன் செல்பி எடுத்து தனது ட்விட்டரில் கடவுள் இந்த தேசத்தை காப்பாற்றட்டும் என பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவுக்கு கீழ் நகைச்சுவை மற்றும் நய்யாண்டி படமான தமிழ் படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன், விண்ட் ஷீல்டை மீண்டும் உங்கள் காரில் எப்படி பொருத்துவீர்கள் என சின்மயி அணிந்திருந்த பெரிய கூலிங் கிளாஸ் குறித்து நக்கல் அடித்தார்.
இதற்கு சின்மயி, ”உங்களின் உதவியோடு தான்” என கூலாக பதிலளித்தார்.