மாணவர்களே ரெடியா? - பிளஸ் 2 ரிசல்ட் இன்று!
தமிழக மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. இணையதளங்கள், பள்ளிகள் மற்றும் மொபைல் எஸ்.எம்.எஸ். வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி படிப்பை முடித்து கல்லூரி மற்றும் பிற படிப்புகளுக்கு அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டாக இன்றைய தேர்வு முடிவுகள் அமைய உள்ளன.
தமிழகத்தில் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடந்த பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று ஏப்ரல் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களின் வாயிலாகவும், நீங்கள் படித்த பள்ளிகளுக்கும் சென்று அறிந்து கொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இந்த தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வாழ்த்துகள். தேர்வில் தோல்வியடைந்து விட்டால் எந்த தவறான முடிவுக்கும் செல்ல வேண்டாம். உங்களுக்காக இருக்கவே இருக்கு சிறப்புத் துணைத் தேர்வு. வரும் ஜூன் 6 முதல் ஜூன் 13 வரை நடைபெறும். அதற்கு தயாராகி தவறவிட்ட வெற்றியை மீண்டும் பதிவு செய்யலாம். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; வழக்கம் போல் மாணவிகள் தான் டாப்!