பிளஸ் 2 தேர்வில் 4 மாவட்டங்கள் 95% தேர்ச்சி - திருப்பூர் மாவட்டம் முதலிடம்!
பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின. இதில், 4 மாவட்டங்கள் 95 சதவிகிதத்திற்கு மேல் தேர்சி பெற்றுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இதில், திருப்பூர் மாவட்டம் 95.37% தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் 95.23% தேர்ச்சி விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 95.15% தேர்ச்சி விழுக்காட்டுடன் மூன்றாம் இடத்தையும், கோவை மாவட்டம் 95.01% தேர்ச்சி விழுக்காட்டுடன் 4ம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த 4 மாவட்டங்களும் 95 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன. 5ம் இடத்தில் சற்றே குறைந்து நாமக்கல் மாவட்டம் 94.97% தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளது.
இயற்பியல் - 93.89%, வேதியியல் – 94.88%, உயிரியல் – 96.05%, கணிதம் – 96.25%, தாவரவியல் – 89.98%, விலங்கியல் – 89.44%, கணினி அறிவியல் – 95.27%, வணிகவியல் 91.23%, கணக்குப் பதிவியல் பாடத்தில் 92.41% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகள் 84.76% தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 98.26% தேர்ச்சியும் பெற்றுள்ளன.
நாளை முதல் வரும் 26ம் தேதி வரை தற்காலிக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
`நான் சொல்லப்போற விஷயத்தை நாட்டு மக்கள்கிட்ட சேர்த்துருங்க' - அரசியல்வாதி அமீர் ரெக்வஸ்ட்!