மாறு வேடத்தில் கங்குலி: துர்காவுக்காக என மனம் திறப்பு!
இந்தியக் கிரிக்கெட்டின் ‘தாதா’ என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் சுயசரிதை விரைவில் வெளிவர உள்ள நிலையில் அப்புத்தகத்தில் தன் விருப்பங்களுக்காக தான் மேற்கொண்ட சாகசங்களை பகிர்ந்துள்ளார்.
கொல்கத்தா சிங்கமாகக் கருதப்படுபவர் கங்குலி. இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த போது மட்டுமல்லாமல் இன்று வரையில் இந்தியக் கிரிக்கெட்டின் நிரனந்திர தாதா தன் சுயசரிதையை வெளியிட உள்ளார். ‘ஒரு சதம் போதாது’ (A Century is not enough) என்ற தன் சுயசரிதைப் புத்தகத்தில் தனக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ளான காதல் குறித்து மிகவும் விரிவாகவே கங்குலி பகிர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், ஒரு பிரபல நட்சத்திரமாகத்தான் வளர்ந்து வந்த காலத்தில் தன் விருப்பங்களுக்காக மாறுவேடம் அணிந்து சென்ற நினைவுகளை எல்லாம் தன் வாழ்க்கை சுவாரசியங்களாக அப்புத்தகத்தில் விவரித்துள்ளார்.
கங்குலி தன் ட்விட்டர் பக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள தன் சுயசரிதை குறித்த ஒரு சிறு அறிமுகத்தை பகிந்துள்ளார். அதாவது, இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாகத்தான் இருந்தபோது கொல்கத்தாவின் வெகு பிரபலமான துர்கா பூஜையைக் காண்பது மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கொண்டாட்டம் எனக் கூறியுள்ளார் கங்குலி.
ஆனால், ரசிகர்கள், பாதுகாப்பு காரணங்கள் என துர்கா பூஜையைக் காண முடியாமல் இருக்க முடியாது என ‘சர்தார்ஜி’ வேடமணிந்து சென்றது எனப் பல சுவாரசியங்களை தன் புத்தகத்தில் பகிர்ந்திருப்பதாகக் கங்குலி கூறியுள்ளார்.