சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் எப்போ தெரியுமா?
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றி படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.
ஸ்டூடியொ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள மிஸ்டர் லோக்கல் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் நேரம் என்பதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. மே 1ம் தேதி உழைப்பாளிகள் தினத்தில் வரும் என எதிர்பார்த்த மிஸ்டர் லோக்கல் கடைசியாக மே 17ம் தேதி வெளியாகிறது என்ற அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த டக்குன்னு டக்குன்னு பாடலை அனிருத் பாடியிருந்தார். அந்த பாடல் வெளியாகி பயங்கர ஹிட் அடித்துள்ளது.
சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் ஐந்து உச்ச நடிகர்கள்