`பலருக்கும் கிடைக்காத வாய்ப்பை எனக்கு தோனி கொடுத்தார் - கோலி சொல்லும் விசுவாச கதை
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில், தகுதிபெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், தனது பரம வைரியான பாகிஸ்தானை ஜூன் 16-ம் தேதி எதிர்கொள்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அதில், ``தோனியை பொறுத்தவரை போட்டியின் தன்மையை ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் கணிக்க கூடிய வல்லமை படைத்தவர். முதல் பந்தில் இருந்து 300-வது பந்துவரை என்ன நடக்கும் என்பதை புரிந்து கொண்டு விளையாடக்கூடியவர். அவர் ஸ்டம்புக்கு பின்னால் டோனி இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம் தான். அப்படி இருக்கையில் அவரை பலரும் விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமான ஒன்று. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டி முடிந்ததும் டோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்துவேன்.
அதேபோல் டெத் ஓவர்களில் பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்ய விரும்புவேன். இப்படி செய்வதனால் அணிக்கு நல்ல பங்களிப்பை கொடுக்க முடியும். அந்த நேரத்தில் யாரேனும் ஒருவர் என்னுடைய பொறுப்பை மேற் கொள்ள வேண்டும். 30-35 ஓவர்களுக்கு பின்னர் நான் பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்ய சென்று விடுவேன் என்று தோனிக்கும் தெரியும். பின்னர் என்ன நடக்கும் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையில் அதிக அளவில் நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் எனக்கு தோனியிடம் இருந்து நிறைய ஆதரவு இருந்தது. 3-வது வரிசையில் விளையாடும் வாய்ப்பு அளித்தவர் அவர் தான். நிறைய இளைஞர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். தோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விசுவாசமே எப்போதும் முக்கியத்துவம் பெறும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! -தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு