`உங்களை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்போகிறேன் - ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் `மோடிக்கள்

ராகுல் காந்திக்கு மோடி என பெயர் வைத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மக்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்படி பிரச்சாரத்தில் ஈடுபடும் அவர் பாஜகவையும் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். சில நேரங்களில் இந்த விமர்சனம் தனிப்பட்ட வகையிலும் அமைந்துவிடுகிறது. அந்தவகையில் கடந்த 13-ந் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பேசுகையில், “மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்கள்” என்றார். இதற்கு இப்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மோடி என பெயர் வைத்தவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது உள்ளனர்.

லலித் மோடி வெளியிட்டு டுவிட்டர் பதிவில், ``அனைத்து மோடிகளும் திருடர்கள் என்று கூறி இருக்கும் ராகுலை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்போகிறேன். 50 வருடங்களாக இந்தியாவில் பகல் கொள்ளையடித்தது காந்தி குடும்பம் தான் என்பது உலகத்திற்கே தெரியும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் ஒருபடி மேலாக சென்று பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சுஷில் குமார் மோடி ராகுல் காந்திக்கு எதிராக வழங்க்கு தொடர்ந்துள்ளார். ``சமூகத்தில் எனது நற்பெயரை களங்கப்படுத்தி விட்டார். இது ஒரு குற்றச்செயல். ஆகவே, அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டும். அதன்மூலம், வழக்கின் முடிவில் அவர் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது ராகுல் காந்திக்கு புது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 

கடமையை செய்தது தப்பா? – மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்தவர் சஸ்பெண்ட்!
More News >>