தவறுதலாக தாமரை பட்டனை அழுத்திட்டேன்..! தண்டனையா விரலை துண்டிச்சிட்டேன்...! மாயாவதி கட்சி தொண்டரின் விபரீதம்

உ.பி.யில் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பகுஜன்கட்சித் தொண்டர் ஒருவர், தவறுதலாக பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டுப் போட்டு விட்ட விரக்தியில் ஓட்டுப் போட்ட தனது விரலை துண்டித்து தனக்குத் தானே தண்டனை கொடுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.

உ.பி.மாநிலத்தில் இம் முறை பாஜகவை எதிர்த்து சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து வலுவான எதிர்ப்பை கொடுத்து வருகிறது. காங்கிரசும் தனித்து களம் காண்கிறது. இதனால் உ.பி.யில் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 8 தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்று 2-ம் கட்ட தேர்தல் 7 நடைபெற்றது.

இதில் சிகார்பூர் தொகுதியில் பாஜக சார்பில் தற்போதைய எம்.பி. போலா சிங்குக்கும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் யோகேஷ்வர்மா இடையே தான் கடும் போட்டி .நேற்று நடந்த வாக்குப் பதிவின் போது பகுஜன்கட்சித் தொண்டர் பவன்குமார் என்பவர் ஓட்டுப் போடச் சென்றுள்ளார். அப்போது தனது கட்சியின் சின்னமான யானை சின்னத்திற்கு பதிலாக, தவறுதலாக பாஜக சின்னமான தாமரை பட்டனை அழுத்த ஓட்டும் பதிவாகி விட்டது. தான் செய்த தவறை உணர்ந்த அந்த பகுஜன் கட்சித் தொண்டர் விரக்தியடைந்து விட்டார்.

புலம்பியபடி நேராக வீட்டிற்கு சென்ற அந்தத் தொண்டர், தாமரைக்கு ஓட்டுப் போட்ட விரல் இருக்கக் கூடாது என்ற தனது விரலை வெட்டி துண்டித்து விட்டார்.தாமரைக்கு ஓட்டுப் போட்டதற்காக தனக்குத்தானே நூதன தண்டனை கொடுத்த அந்த இளைஞரின் விபரீத செயல் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`உங்களை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்போகிறேன்' - ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் `மோடி'க்கள்
More News >>