நாளை நமதே:வெற்றி தொடரட்டும்..! பிளஸ் டூ மாணவர்களுக்கு கமல் வாழ்த்து
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5% அதிகமாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ் டூ வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார். அதில், பிளஸ் டூ தேர்வில் பங்கேற்ற ஒவ்வொரு மாணவ , மாணவியருக்கும் வாழ்த்துக்கள். இதுவே முழுமையான வெற்றி .இந்த வெற்றி தொடரட்டும்.
ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த, தாங்கள் எந்தத் துறையில் சாதிக்க முடியும் என்று நம்புகிறீர்களோ அந்தத் துறையை தேர்வு செய்து வெற்றியை தொடருங்கள். நாளை நமதே என்று மாணவர்களை கமல் உற்சாகப்படுத்தியுள்ளார்.
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கோவை சரளா ஐக்கியம் - தேர்தலிலும் போட்டியிடுகிறார்