மாதவிடாய் மறைக்கப்பட வேண்டியதில்லை: நடிகர் அக்zwnjஷய் குமாரின் புதிய கீதம்!
‘பெண்களுக்கு மாதவிடாய் என்பது கொடுமையானது இல்லை. அந்நாட்கள் மறைக்கப்பட வேண்டியவையும் இல்லை’ என்பதை வலியுறுத்தும் விதமாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ‘ப்ளீடிங் ராணி’ என்ற ஒரு மாதவிடாய் கீதத்தை வெளியியிட்டுள்ளார்.
பாலிவுட்டில் சில காலமாக வித்யாசமான கதை அம்சங்களுடன் கூடியத் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அக்ஷய்குமார். சில மாதங்களுக்கு முன்னர் கழிப்பறையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ‘ஏக் டாய்லெட் கீ பிரேம் காதா’ என்ற சமூக விழிப்புணர்வு படம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது மாதவிடாய் ஒன்றும் தீண்டத்தகாத, பேசக்கூடாத விஷய்ம் என்பதில்லை என்பதை வெளிக்காட்டும் விதத்தில் ‘பேட்மேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் அக்ஷய்குமார் யூ-டியூப் பிரபலமான ஆரண்யா ஜோஹருடன் இணைந்து ஒரு மாதவிடாய் பாடலைப் பாடி யூ-டியூப் மூலம் வெளியிட்டுள்ளார். இதற்கு பாலிவுட்டின் பல முக்கியப் பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.