விஜய் அண்ணா...சாரி..! பேசுனது தப்பு தான்...! கருணாகரன் சரண்டர்

தான் பேசியதற்காக மன்னித்து விடுங்கள் என விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார் நகைச்சுவை நடிகர் கருணாகரன்.

சமூக வலைத்தளமான ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஆள் காமெடி நடிகர் கருணாகரன். அரசியல் பார்வையும் கொண்டவர். அதிலும் திமுக சார்ந்த அரசியல் பார்வையே அதிகம்.

அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தின் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அரசியல் வட்டாத்தில் சர்சையாக வெடித்தது. இதற்கு, நடிகர் கருணாகரன் ட்விட்டரில், ‘குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா’ என ட்வீட் செய்திருந்தார்.

அவ்வளவுதான், விஜய் ரசிகர்கள் கருணாகரனிடம் ட்விட்டரில் மோத தொடங்கி விட்டனர். அவரும் சளைக்காமல் பதிலடி கொடுத்தார். ஒரு கட்டத்தில் இணையதளத்தில் கருணாகரின் நம்பரை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்ய, கால் செய்து அவரை வறுத்து எடுத்து விட்டனர் ரசிகர்கள். பின், போதுமடா சாமி என ட்விட்டரை விட்டு நீங்கினார்.

இந்நிலையில், மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ள கருணாகரன், ‘’நான் பொதுவாக யாரையும் வெறுப்பதுமில்லை;புண்படுத்துவதுமில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத் தக்க அந்த வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்கக் கூடாது. தவறுதான். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் நான் விரும்பும் நடிகர், இது அவருக்கும் தெரியும். சமூக வலைதளத்தில் நான் பயன்படுத்திய  எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சர்காரை தொடர்ந்து ’தர்பார்’ – தலைவர் 167வது படத்தின் தலைப்பு அறிவிப்பு!
More News >>