4ஜி சேவையில் ஜியோ முதலிடம்
4ஜி சேவை வழங்கும் உலக நாடுகளின் அலைபேசி நிறுவனங்களில் தேசிய அளவிலான சேவை தரத்தில்ல் ரிலையன்ஸ் ஜியோ சிறப்பிடம் பெற்றுள்ளது. அலைபேசி சேவைகளை ஆய்வு செய்யும் லண்டனை சேர்ந்த ஓபன்சிக்னல் என்ற நிறுவனத்தின் அறிக்கை இதை தெரிவித்துள்ளது.
அலைபேசி இணைப்பு அனுபவம் (Mobile Network Experience) குறித்து செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 4ஜி அலைக்கற்றை சேவையை பயனர்களுக்கு கிடைக்கச் செய்வதில் தேசிய அளவில் 97.5 விழுக்காடு என்ற மிகப்பெரிய தரநிலையை ரிலையன்ஸ் ஜியோ எட்டியுள்ளது. 96.7 விழுக்காடு என்ற நிலையிலிருந்து ஆறு மாத காலத்துக்குள் 97.5 விழுக்காடு சேவை விரிவினை அது அடைந்துள்ளது.
90 விழுக்காடு என்ற தேசிய அளவை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரண்டு நிறுவனங்களும் தைவானில் நான்கு நிறுவனங்களும் எட்டியுள்ளன. ஐரோப்பாவில் அலைபேசி சந்தையில் முன்னேறிய நாடாக கருதப்படும் நெதர்லாந்தில் ஒரே ஒரு நிறுவனம் 95 விழுக்காடு என்ற அளவை கடந்துள்ளது. ஜப்பான் நாட்டில் இரண்டு நிறுவனங்கள் இந்த அளவை கடந்துள்ளன.
4 ஜி அலைக்கற்றை சேவையை கிடைக்கச் செய்வதில் பார்த்தி ஏர்டெல் நிறுவனம் 10 விழுக்காடு உயர்ந்து 85 விழுக்காடு என்ற நிலையை கடந்துள்ளது.4ஜி பதிவேற்ற வேகத்தில் 3.8 Mbps வேகத்தோடு ஐடியா முதலிடத்திலும் வோடஃபோன் 3.2 Mbps வேகத்தோடு இரண்டாம் இடத்திலும் ஏர்டெல் 2.6 Mbps வேகத்தோடு அடுத்த நிலையிலும் உள்ளன. ஜியோ 1.9 Mbps பதிவேற்ற (upload) வேகம் கொண்டுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரி விலக்கு? –வெளியானது புதிய தகவல்