ரஜினி, கமலை தொடர்ந்து இளையதளபதி..
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் ஈடுப்பாடு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவித்தார். மேலும், ரஜினி ரசிகர் மன்றம் என்ற செயலியையும் தொடங்கி அரசியலின் ஆரம்பகட்ட பணியை செய்து வருகிறார்.
ரஜினியை தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசனும் வரும் 21ம் தேதி நாளை நமதே என்ற கோஷத்துடன் புதிய கட்சியை ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கவுள்ளார்.
இந்நிலையில், இளையதளபதி விஜய் தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக புதிய அதிகாரபூர்வ இணையதளம் ஒன்றை தொடங்க உள்ளார். இதைதொடர்ந்து, செயலியையும் அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையதளபதியின் இந்த விறுவிறு செயலால், ரஜினி, கமலை தொடர்ந்து விஜய்யும் அரசியல் களத்தில் ஒரு கை பார்க்க ஆயத்தமாகி வருகிறார் என வட்டாரங்கள் கூறுகின்றன.