தாயின் கொடூரமான சித்ரவதையால் பலியான சிறுவன்...

கேரள மாநிலத்தில், தாயால் சித்ரவதை செய்யப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.சில தினங்களுக்கு முன், கொச்சி அருகே, அலுவா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தலையில் பலத்த காயத்துடன், 3 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவனின் உடல் முழுக்க காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த டாக்டர்கள் உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் சிறுவனின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனின் தந்தை சொன்ன தகவல் நெஞ்சை பதற வைப்பதாக இருந்தது.

சொல் பேச்சு கேட்க மறுத்த சிறுவனை அவனது தாய் மரக்கட்டையால் தலையில் அடித்து சித்ரவைதை செய்ததே பலியான சிறுவனின் தந்தை சொன்னார். இதனையடுத்து, சிறுவனின் தாய் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நேற்று முன்தினம், கைது செய்தனர். பெற்ற தாயே தனது பச்சிளம் குழந்தையை சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சிறுவனின் சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக, அறிவித்த கேரள அரசு, கோட்டயம் மருத்துவமனையிலிருந்து நிபுணர் குழுவையும் அனுப்பியது.ஆனால், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

ப்ரீ வெட்டிங் பரிதாபங்கள்; போட்டோஷூட்டின் போது ஆற்றில் விழுந்த திருமண ஜோடி!
More News >>