ராகுல் காந்தியின் கனவு...! அண்ணனுக்கு ஆதரவாக பிரியங்கா...! பாஜக வியூகம்...! வயநாடு தேர்தல் களம்

கேரளாவில் இதுவரை காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியா அல்லது இடதுசாரி கூட்டணிக்கு வெற்றியா என்ற கேள்வி மட்டுமே எழுந்து வந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கேரளா தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. 

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலின் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் கேரளாவில் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. அங்கு, நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிகிறது. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற தொகுதியாக வயநாடு உள்ளது. அமேதியை, தொடர்ந்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது கேரளா தேர்தல்.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியானதுடன், பாஜக முன்னிறுத்திய தனது வேட்பாளரை நீக்கிவிட்டு, கூட்டணிக் கட்சி தலைவரான துஷார் வெள்ளாப்பள்ளியை வேட்பாளராக அறிவித்தது. மேலும், கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணியில் உள்ள  எல்.டி.எப் கூட்டணியில் சி.பி.ஐ வேட்பாளராக சுனீா் களத்தில் இருக்கிறார். இதனால், வயநாடு தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றது மட்டுமல்லாமல், இங்குத் தேசிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அண்ணன் ராகுல் காந்திக்கு ஆதரவாக, பிரியங்கா பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். துஷார் வெள்ளாப்பள்ளிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சுல்தான் பெத்தேரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பிரசாரக் களமும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 

முன்னதாக, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆளும் கூட்டணிக் கட்சி இந்த தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் எனவும் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவுக்கு ஆதரவு அலை உள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதாலும், பாஜக தனது வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், கேரளா தேர்தல் களம் உச்சக் கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

கேரளாவில் வரும் 23ம் தேதி தேர்தல். அதற்குச் சரியாக ஒரு மாதாம், அதாவது மே 23 வாக்கு எண்ணிக்கை அன்று தெரியும் மக்கள் தீர்ப்பு.

`உங்களை லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்போகிறேன்' - ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் `மோடி'க்கள்

More News >>