ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களைக் கைவிடாமல் 500 பேரைக் காப்பாற்றியது ஸ்பைஸ் ஜெட்!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

இந்தியாவில் விமான சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் கடந்த புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் பத்து போயிங் 777-300ERs ரக விமானங்களும், ஆறு ஏர்பஸ் A330s ரக விமானங்களும் என 16 பெரிய விமானங்கள் உள்ளன. இதில் ஐந்து போயிங் ரக விமானங்களை குத்தகை எடுக்க விரும்புவதாக ஏர் இந்தியா தலைவர் அஷ்வானி லொஹானி எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னிஷ் குமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என சமீபத்தில்  டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்நிறுவனத்தில் பணியாற்றிய பைலட்கள் மாதம் ரூ.4 லட்சம் வரை ஊதியம் பெற்று வந்தனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், பொறியாளர்கள், விமான பைலட்கள், பணிப்பெண்கள் என அனைவரும் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் பணி அமர்த்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கடன் பாக்கி -அபாயத்தில் ஜெட் ஏர்வேஸ்

 

More News >>