பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு..ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்!

பெண்களை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தற்காக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில், இந்தி பட இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய `காஃபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் விருந்தினராகக் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் பெண்கள் குறித்துக் கொச்சைப்படுத்தும் வகையில்  பேசியதாகச் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் இருவரையும் சஸ்பெண்ட் செய்தது. அதன்பின், இருவரும் மன்னிப்பு கோரினர். இந்த நிலையில், அவர்களின் சஸ்பெண்டை ரத்து செய்து மீண்டும் அணியில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான புகார்களை விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்சநீதிமன்றம் நியமித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், ‘தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 10 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும், அதோடு, பார்வையற்றோர்  கிரிக்கெட் சங்கத்துக்குத் தலா ரூ.10 லட்சத்தை இருவரும், 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் சம்பளத்தில் இருந்து அந்த தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் பிடித்தம் செய்து கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை, பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

More News >>