வரிசையில் வராததால் அஜித்தை தாக்கிய பொதுமக்கள்? ட்ரெண்டாகும் ஓட்பூத்தில்செமகாட்டு ஹேஷ்டேக்
நடிகர் அஜித் சென்னையில் வாக்களிக்கும் போது அவரை சிலர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலின் போது சென்னை, திருவான்மியூரில் நடிகர் அஜித் ஓட்டுப் போட வரும் போது அவரை பின்னால் இருந்து சிலர் தாக்கியதாகவும், வரிசையில் அஜித் வராததற்கு பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் ட்விட்டரில் #ஓட்பூத்தில்செமகாட்டு எனும் மோசமான தலைப்பிட்டு ட்ரெண்டாகி வருகின்றது.
மக்களவைத் தேர்தலில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு வலது கரத்தில் மை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பிய நிலையில், நடிகர் அஜித் வாக்களிக்க வரும் போது அவரது வருகையை அறிந்து பெருந்திரளான ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது.
அப்போது, வரிசையில் வராமல் போலீசார் உதவியுடன் நேராக பூத்துக்கு சென்று அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்ததாகவும், அப்போது சிலர் அவரது தலையில் தாக்கியது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்ற சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில், எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி நடிகர் விஜய் வரிசையில் நின்று ஓட்டுப் போட்ட முழு நீள வீடியோக்கள் ட்ரெண்டான நிலையில், தற்போது அஜித்தின் இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.