இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு நோ...கலை அறிவியல் படிப்புக்கு மவுசு!
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கலை அறிவியல் கல்லூரியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெறக் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கலை அறிவியல் துறை சார்ந்த படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகளின் தரம் மற்றும் விருப்பமான பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்வதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் துவங்கியது.
பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்ததன் காரணமாக மாணவர்கள் மத்தியில் கலை அறிவியல் படிப்புக்கு மவுசு அதிகரித்திருப்பதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், பெரும்பாலான மாணவர்கள் பி.காம்., படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், இந்த ஆண்டும் பி,காம் படிப்பிற்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், தனியார் சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகளுடைய போட்டியை சமாளிக்கும் வகையில் பெருப்பாலான அரசுக் கல்லூரிகள் மாணவர்களின் வசதிக்காக இணையம் வழியாக விண்ணப்ப முறையை, இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளன. இதனால், மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாணவர்கள் விண்ணப்பங்களை வங்க வேண்டிய அவசியம் இல்லை.
பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலை எடுத்து நடத்த... சூரப்பா கடிதம்