ஸ்டீவ் ஸ்மித் சரவெடி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

மும்பை அணி நிர்ணயித்த 162 ரன்கள் இலக்கை 19.1 ஓவர்களில் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துவக்கம் முதல் இறுதி வரை கிளாஸ் ஆன ஆட்டத்தை ஆடி 48 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகள் விளாசி 59 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் ஸ்டீவ் ஸ்மித்துடன் பார்ட்னர்ஷிப் போட்டு ஆடிய ரியான் பராக் 29 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகள் என அதிரடி காட்டிய நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தின் தேவையில்லாத 2வது ஓட்டத்தால் 43 ரன்களில் பரிதாபமாக அவுட்டானார்.

19.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மும்பை அணி சார்பாக ராகுல் சாஹர் சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுவரை 10 போட்டிகள் விளையாடியுள்ள மும்பை அணி 6 போட்டிகளில் வெற்றியையும் 4 போட்டிகளில் தோல்வியும் தழுவி தொடர்ந்து சென்னைக்கு அடுத்தபடியாக 2வது இடத்திலேயே இருக்கிறது. ராஜஸ்தான் ராயல் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று பெங்களூர் அணிக்கு சற்று மேலே 7வது இடத்தில் இருக்கிறது.

ஜோஸ் பட்லர் ஜோர்… 4விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!
More News >>