ஜெய்க்காக போட்டிப்போடும் மூன்று நாகினிகள்! திக் திக் நீயா 2 கதை இதுதான்
நடிகர் ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே திரைப்படத்தின் கதையும் கசிந்துவிட்டது.
கமல், ஸ்ரீபிரியா, சந்திரமோகன், ஜெய்கணேஷ், லதா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த நீயா படம் நினைவில் இருக்கிறதா. இந்த படத்தில் பாம்பு பழி வாங்கும். தற்போது இந்த படத்தின் பெயரை மையமாக வைத்து நீயா 2 உருவாகியுள்ளது. நடிகர் ஜெய் தான் நாயகன். அவருக்காக ஏங்கும் மூன்று நாயகிகளாக ராய் லக்ஷ்மி, கேதரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார். இறுதிக்கட்ட பணிகள் முடிந்தும் இந்த படம் நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்தது. அண்மையில் நீயா 2 படத்தின் ரிலீஸ்தேதி அறிவிக்கப்பட்டது. படம் மே 2 ஆம் தேதி வெளியாகும்.
இந்த படத்தில் ஜெய் முதலில் ராய் லக்ஷ்மியை உயிருக்கு உயிராய் காதலிப்பார். தவிர்க்க முடியாத காரணத்தினால் கேத்ரின் தெரசாவை திருமணம் செய்துகொள்வார். இதனை அறிந்த ராய் லக்ஷ்மி ஜெய்யை தேடி அலைவாராம். ஜெய்யின் வீட்டை தேடி கண்டுபிடித்து போகிறார். அங்கு ஜெய்யும் கேதரினும் நெருக்கமாக இருப்பதை பார்த்து கடுப்பாகிறார். ஜெய்யை அடைய முயற்சி செய்கிறார். இப்படியாக கதை நகர, திருப்புமுனையாக வரலட்சுமி கதைக்குள் நுழைகிறார். அடுத்து என்ன நடக்கிறது? ராய் லட்சுமி ஜெய்யை அடைகிறாரா இல்லையா? வரலட்சுமிக்கும் ஜெய்க்கும் என்ன தொடர்பு என்பது தான் கதை.
படத்தில் ராஜ நாகம் ஒன்றுக்கு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான கமலின் நீயா படத்தை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.. பாடலை யாராலும் மறக்க முடியாது. அதே போன்று ஜெய்யின் நீயா 2 படமும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லரில் நாயகிகள் மூன்று பேருமே பாம்பாகிறார்கள். எனவே படம் மிகவும் த்ரில்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தமிழ் இனத்திற்கே அவமானம் இல்லையா...! –பொன்பரப்பி குறித்து கமல்